INDvsWI Test – இரண்டாம் நாள் முடிவில் 448 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ஓட்டங்களுடனும் , சுப்மன் கில் 18 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது ராகுல் சதம் மற்றும் கில் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர்.
அவர்களை தொடர்ந்து ஜூரல் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து இருவரும் சதம் அடித்தனர்.
இந்நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜடேஜா 104 ஓட்டங்கள் மற்றும் சுந்தர் 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.





