செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில்(Visakhapatnam) நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டி காக்(de Kock) 110 ஓட்டங்களும் டெம்பா பவுமா(Temba Bavuma) 48 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில், ரோகித் சர்மா(Rohit Sharma) 75 ஓட்டங்களும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்(Yashasvi Jaiswal) 116 ஓட்டங்களும் விராட் கோலி(Virat Kohli) 65 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஜெய்ஸ்வாலும் தொடரின் நாயகன் விருதை விராட் கோலியும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணியும் ஒருநாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடர் ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!