திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது.
இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.





