சிங்கப்பூர் பரிதாபமாக உயிரிழந்த இந்திய ஊழியர்

சிங்கப்பூர் – பாசிர் ரிஸில் இந்திய கட்டுமான ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலையிடத்தில் கடந்த 24ஆம் திகதி அன்று கேபிள் இணைப்பு பணியை மேற்கொண்டு இருந்த அவர் மீது இரும்பு கம்பி தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து பாசிர் ரிஸ் இண்டஸ்ட்ரியல் டிரைவ் 1 இல் அன்று பிற்பகல் 2.15 மணியளவில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.
கேபிள் டிரம்மை தாங்கி நிற்க பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்டாண்ட் முறிந்து இந்த விபத்து ஏற்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.
அன்று மதியம் 2.30 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் பாதுகாப்புப் படை தெரிவித்தது. விபத்தில் சிக்கிய இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான ஊழியர் பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனையிலேயே அவர் இறந்தார் என சொல்லப்பட்டுள்ளது.