பிரான்சிடம் இருந்து பெரிய அளவில் போர் விமானங்களை வாக்கிக் குவிக்கும் இந்தியா

இந்தியா தனது கடற்படைக்காக 26 புதிய போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.
பிரான்சில் தயாரிக்கப்படும் ரஃபேல் ரக அதிநவீன போர் விமானங்களை வாங்கவுள்ளதாகவும், ஒப்பந்தம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் விஜயத்துடன் இணைந்து அதன் செயற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, போர் விமானங்களுக்கு மேலதிகமாக, இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 03 நீர்மூழ்கிக் கப்பல்களையும் பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)