இந்தியா இலங்கை செய்தி தமிழ்நாடு

இலங்கை வலிமையாக மீண்டெழும்!” – ஜனாதிபதி அநுரவுக்கு பிரதமர் மோடி விசேட கடிதம்

டித்வா’ (Dithwa) புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவர் விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கையின் நிவாரணம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள் குறித்து நேரில் ஆராய, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை தனது விசேட பிரதிநிதியாக பிரதமர் மோடி அனுப்பி வைத்திருந்தார்.

இந்தநிலையில்,  குறித்த கடிதத்தில் ‘அயலவருக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் கீழ், ‘சாகர் பந்து’ நடவடிக்கை (Operation Sagar Bandhu) மூலம் இந்தியக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஏற்கனவே அவசர கால உதவிகளை வழங்கியுள்ளதை இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ சேவைகள் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளைச் சீரமைக்க இந்திய விசேட குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

இலங்கை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவும், எதிர்கால சவால்களைத் தாங்கும் சக்தியைப் பெறவும் இந்தியா ஒரு விரிவான சலுகைப் பொதியை (Concessional Package) அறிவித்துள்ளது.

இதனைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரசாங்கத்துடன் விரிவாக ஆலோசித்துள்ளார்.

“நம்பகமான நண்பனாக இந்தியா எப்போதும் இலங்கையுடன் தோளோடு தோள் நிற்கும். இலங்கை இந்தச் சவாலில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக எழுச்சி பெறும் என்று நான் நம்புகிறேன்,” என பிரதமர் மோடி தனது கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!