வங்கதேசத்தில் மேலும் 2 விசா மையங்களை மூடிய இந்தியா
நாட்டில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமைக்கு மத்தியில், வங்கதேசத்தின்(Bangladesh) ராஜ்ஷாஹி(Rajshahi) மற்றும் குல்னாவில்(Khulna) உள்ள மேலும் இரண்டு விசா விண்ணப்ப மையங்களை இந்தியா மூடியுள்ளது.
“ஜூலை ஓய்க்யா”(July Oikya) என்ற பதாகையின் கீழ், தீவிர இஸ்லாமியவாதிகள் குழு ஒன்று, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) நாடு திரும்பச் செய்வது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய உயர் ஸ்தானிகராலயம் அருகே ஒரு போராட்ட பேரணியை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு ராஜ்ஷாஹி மற்றும் குல்னாவில் உள்ள விசா விண்ணப்ப மையங்கள் மூடப்படும் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இன்று சமர்ப்பிப்பதற்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பின்னர் ஒரு திகதியில் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
இதற்கு முன்னதாக, நேற்று டாக்காவில்(Dhaka) உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க்கில்(Jamuna Future Park) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் டாக்காவில் உள்ள விசா மையத்தை மூடிய இந்தியா





