அகமதாபாத் டி20: 231 ரன்கள் குவித்து இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்களால் வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, திலக் வர்மாவின் 73 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 63 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 231 ரன்களைக் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
லக்னோவில் நடைபெறவிருந்த நான்காவது போட்டி மூடுபனி காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றுள்ளது.





