உலகளவில் நகர்ப்புறங்களில் அதிகரித்த எண்ணிக்கை – விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்
உலகளவில் நகர்ப்புறங்களில் எலிகளின் எண்ணிக்கை கூடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் எலிகளின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிவது கடினமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் ஆய்வாளர்கள், எலிகளைப் பார்ப்பதை வைத்தும் அவற்றைப் பிடித்தும் தரவுகளைச் சேகரித்தனர்.
வொஷிங்டன், டொரொண்டோ, ஆம்ஸ்டர்டாம் உட்பட 16 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
வெப்ப அதிகரிப்புக் காரணமாக, எலிகளால் ஆண்டின் மேலும் அதிகமான நாள்களில் இனப்பெருக்கம் செய்ய முடிகிறது என்பதும் பரவலாக உணவைத் தேட முடிகிறது என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.
அதிகரிக்கும் மக்கள்தொகையால் நகரங்களில் உணவுக் கழிவுகள் அதிகமாகின்றன.
இதனால் எலிக்கூட்டம் பெருகுவதற்கு அதுவும் ஒரு காரணம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.