ஜேர்மனில் 82 வயது முதியவருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று, 82 வயது முதியவர் ஒருவருக்கு இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஜேர்மன் நகரமான Aurichஐச் சேர்ந்த ஒருவர், கப்பல் பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். அவருக்கு 800 யூரோக்கள் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறதாம்.ஆகவே, தனது நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக கஞ்சா விற்கத் துவங்கியுள்ளார் அவர். ஆனால், ஜேர்மனியில் பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்த தடை உள்ளது.ஆகவே, அந்த 82 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரியிருந்தனர். காரணம், இதற்கு முன் 24 முறை இதே குற்றச்செயலில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அவர்.ஆனால், நீதிமன்றமோ அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கவில்லை.
அவரது உடல் நிலையையும், வாழ்க்கைச் சூழலையும் சுட்டிக்காட்டி அவருக்கு சிறைத்தண்டனையிலிருந்து விலக்களித்துள்ளார்கள் நீதிபதிகள்.ஆனாலும், இது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை என்று கூறியுள்ளார் தீர்ப்பளித்த நீதிபதி.