இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா ஆகியோருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிப்பு!
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (Bushra Bibi) ஆகியோருக்கு பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சவுதி அரசாங்கத்திடமிருந்து பரிசுகளை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டியின் உயர் பாதுகாப்பு கொண்ட அடியாலா(Adiala) சிறையில் நடந்த விசாரணையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் ( Shahrukh Arjumand) இன்று தீர்ப்பை அறிவித்தார்.
இருவருக்கும் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) இன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் PKR 16.4 மில்லியன் அபராதம் விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





