இலங்கை செய்தி

மிஹிந்தலை ஆலய வளாகத்தில் உள்ள பொலிசார் குறித்த முக்கிய அறிவிப்பு

மிஹிந்தலை புனித வளாகத்தின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரையும் திரும்பப் பெறுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிலங்கா பொலிஸார் தொடர்ந்தும் அந்த வளாகத்தில் கடமைகளில் ஈடுபடுவார்கள் என SSP தல்துவா உறுதியளித்தார்.

இதேவேளை, மிஹிந்தலை புனித வளாகத்தின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 225 பாதுகாப்புப் படையினரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாபஸ் பெறப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிப்பதால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அண்மையில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பீடாதிபதியை மேற்கோள்காட்டி இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், “இராணுவ அதிகாரி ஒருவர் சிவில் உடையில் கோவிலுக்குள் பிரவேசிக்க முடியாது என்பதை அண்மையில் தான் அறிந்தோம். இப்போது அவர் [மிஹிந்தலை தலைமை பீடாதிபதி] கோவிலில் இராணுவ பிரசன்னத்தை தனது உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதினால், 252 அதிகாரிகளையும் இன்று ஆலய வளாகத்தில் இருந்து அகற்றுவோம் என்று தீர்மானித்துள்ளோம்.

எவ்வாறாயினும், ஆலய வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டாலும், அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் மிஹிந்தலை புனித பிரதேசத்தில் தொடர்ந்தும் கடமையில் இருப்பார்கள் என சிறிலங்கா பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை