லிதுவேனியாவிற்கு நூதனமான முறையில் கடத்தப்படும் சட்டவிரோத பொருட்கள்!
பலூன்களை பயன்படுத்தி பெலாரஸிலிருந்து (Belarus) லிதுவேனியாவிற்கு (Lithuania) சிகரெட்டுகளை கடத்தியதாக கூறப்படும் 21 சந்தேகநபர்கள் லிதுவேனிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 80 இற்கும் மேற்பட்ட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக பெலாரஷ்ய கலால் முத்திரைகள், துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சொகுசு கார்கள் மற்றும் பிற மதிப்புமிக்க சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பலூன்களால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக லிதுவேனியா தேசிய அவசரநிலையை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்பானது, எல்லை சட்டங்களை மீறி பெலாரஸில் இருந்து லிதுவேனியாவிற்குள் பொருட்களை கடத்துவதாக வழக்குறைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





