நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஆண்களுக்கான வீரர் விருதுக்கான தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அறிவித்துள்ளது.
அந்தவகையில், தென் ஆப்பிரிக்காவின்(South Africa) சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர்(Simon Harmer மற்றும் பங்களாதேஷின்(Bangladesh) தைஜுல் இஸ்லாம்(Taijul Islam) மற்றும் பாகிஸ்தானின்(Pakistan) முகமது நவாஸ்(Mohammad Nawaz) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு(India) எதிரான டெஸ்ட் தொடரில் 8.94 என்ற சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹார்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அயர்லாந்துக்கு(Ireland) எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக தைஜுல் இஸ்லாம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, இலங்கை(Sri Lanka) மற்றும் சிம்பாப்வேக்கு(Zimbabwe) எதிரான முத்தரப்புத் தொடரின் வெற்றியின் போது முகமது நவாஸ் பாகிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.




