ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்!

ஆவணமற்ற நூற்றுக்கணக்கான  புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் (Spain) காவல்துறையினர் இன்று வெளியேற்றியுள்ளனர்.

அவர்கள் பார்சிலோனாவின் (Barcelona) வடக்கே படலோனாவில் (Badalona) அமைந்துள்ள பாடசாலையொன்றில்  வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

குளிர்காலத்திற்கு மத்தியில் இது தொடர்பில் அறிந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோர், காவல்துறையினரின் வருகைக்கு முன்னர் வேறு பாதுகாப்பான இடங்களை கண்டுப்பிடிக்க முயன்றதாக  கூறப்படுகிறது.

செனகல் (Senegal) மற்றும் காம்பியாவிலிருந்து (Gambia) வந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு வசதிகளை அணுகுவதற்கான உதவிகளை செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!