AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அழியப்போகும் மனிதகுலம் – எச்சரிக்கும் நிபுணர்கள்!

செயற்கை நுண்ணறிவு ஒரு சில ஆண்டுகளில் மனிதகுலத்தையே அழித்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (ASI) தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து 02 முதல் 05 ஆண்டுகளே இருக்கும் எனக் கூறும் ஆய்வாளர்கள் அதன் வளர்ச்சி மனித குலத்தையே அழிவுக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் வளர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் இடைநிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது இந்த ஏஐ தொழில்நுட்பமானது திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
02 முதல் 05 ஆண்டுகளில் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த இந்த தொழில்நுட்பமானது இன்னும் 20 வருடங்கள் நீடித்திருந்தால் மிகப் பெரிய ஆச்சரியமான மாற்றங்களை நாம் காணலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மனிதகுலத்தைக் காப்பாற்ற இவ்வாறான எந்தவொரு வளர்ச்சியையும் இடைநிறுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.