முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை – டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை

வொஷிங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘தலைநகர் வொஷிங்டனில் வன்முறைக் கும்பல்கள், இரக்கமற்ற குற்றவாளிகள், போதைக்கு அடிமையான மனநோயாளிகள் அதிகளவில்’ ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடமிருந்து நகரை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வொஷிங்டனில் வீடற்றோர் தங்களது தற்காலிக இருப்பிடங்களை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு மாற்று இருப்பிடமாக முகாம்களுக்குச் செல்லுதல், போதை பழக்க மீட்பு அல்லது மனநல சேவைகளைப் பெறுதல் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும்.

இந்த வாய்ப்புகளை ஏற்க மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் வீடற்றோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2024ம் ஆண்டின் புள்ளி விபரப்படி 7,71,000க்கும் அதிகமான மக்கள் வீடற்று உள்ளனர்.

வொஷிங்டனில் மட்டும் 5,616 பேர் வீடற்றோராக உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 14.1% அதிகம். ஆனால் வீடற்றோருக்கான சேவை அமைப்புகள், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரித்து வருகின்றன.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்