ஐரோப்பா

பாடசாலைகளில் பெண்களுக்கு எதிரான வெறுப்பு – இங்கிலாந்து அரசின் புதிய திட்டம்

வகுப்பறைகளில் பெண்களுக்கு எதிரான வெறுப்பை அடையாளம் கண்டு அதனை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியளிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பாதியாகக் குறைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்தில் உள்ள மாணவர்கள், நடத்தை தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான இந்த திட்டங்கள், இளைஞர்களின் தீவிரமயமாக்கலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

பெண் வெறுப்பு ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டால் எதிர்கால வன்முறை தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது

மேலும், £20 மில்லியன் மதிப்புள்ள திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு சில பாடசாலை ஆசிரியர்கள் பயிற்சி முன்னோட்டத்தில் பங்கேற்க தெரிவு செய்யப்படுகின்றனர்.

Sainth

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!