இலங்கை

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கடற்படையை மேம்படுத்தப்பட்டுள்ளதா? – நாமல் கேள்வி!

இலங்கையில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகின்ற நிலையில், இதில் முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் கடல்களில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் கடற்படையை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான ராஜபக்சே கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25.09) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை கடற்படையின் தொழில்நுட்பம் காலாவதியானது என்றும், தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் டெய்லி மிரர் பத்திரிகை எடுத்துரைத்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2030 ஆம் ஆண்டுக்குள் கடற்படையின் மனிதவளத்தை 40,000 ஆகக் குறைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், மனிதவளக் குறைப்புக்கு ஏற்ப தொழில்நுட்பம் மேம்படுத்தப்படாவிட்டால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படாவிட்டால், தேவைப்படும் மனிதவளம் வழங்கப்படாவிட்டால் கடல் எல்லையைப் பாதுகாப்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்