ஜெர்மனியில் பயணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனிக்கு 4 லட்சம் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை உள்ளதென்பதனால் வெளிநாட்டவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் வந்து வேலை தேடுவதற்கு ஏற்ற வகையில் முதலாம் திகதி முதல் புதிய சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது ஒபர்ச்சுனிட்டி காட் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் குடியேறுகின்ற சட்டமானது அமுல்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த புதிய சட்டம் அமுலுக்கு வந்த பின் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜெர்மன் நாட்டுக்கு 30000 பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டுக்கு தற்பொழுது 4 லட்சம் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய உடனடி தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய ச்சான்சன் காட் என்று சொல்லப்படும் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் வேலை தேடுவதற்காக ஜெர்மன் நாட்டுக்கு வந்து வேலை தேடுகின்ற சட்டம் அமுலுக்கு வரும் பொழுது இவ்வகையாக பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய தேவைகளை இவர்கள் நிவர்த்தி செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளையில் 2020 ஆம் ஆண்டு ஜெர்மனியில் மொத்தமாக 20500 பேர் மட்டுமே பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் ஜெர்மனிக்கு வந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு 70000 ஆயிரம் பேர் இவ்வாறு பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு , ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சானது துரிதகதியில் விசாக்களை வழங்குவதற்கு பணியாளர்களுடைய தொகையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.