ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனி நாட்டில் 49 யூரோ பயண அட்டை 39 யூரோவுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த பயண அட்டையை பயன்படுத்தி பலர் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் இந்த பயண அட்டைக்கு சலுகை வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் டொப்புன் நிர்வாகமானது இவ்வாறு 49 யூரோ பயண அட்டையை 39 யூரோவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.
அதாவது சமூக உதவி பணங்களை பெறுகின்றவர்கள் அல்லது போன்கில்ட என்று சொல்லப்படுகின்ற வீடுகளுக்காக அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவியை பெற்றுக்கொள்கின்றவர்கள் மற்றும் சொஸியா கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணத்தை பெறுகின்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்றும் தெரியவந்து இருக்கின்றது.
இந்நிலையில் ஏற்கனவே ஃவொர் எயாரா டிக்கட் என்று சொல்லப்படுகின்ற மாதாந்த பயண அட்டையை பாவிக்கின்றவர்களுக்கு இந்த பயண அட்டையானது 29 யூரோக்களுக்கு விற்க்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
அதாவது இதுவும் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் அல்லது போன்கில்ட என்று சொல்லப்படுகின்ற வீடுகளுக்காக அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவியை பெற்றுக்கொள்கின்றவர்களுக்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.