வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை – கிறிஸ்துமஸ் தினத்திக்குள் ஏற்படவுள்ள அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,729.83 டொலரைாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் கடந்த 12 மாதங்களில் இது 42 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
செப்டம்பர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட ஆய்வாளர் அறிக்கைகள், இந்த ஆண்டு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,750 டொலரை எட்டும் என்று தெரிவித்தன.
இந்த எண்ணிக்கை 4,000 டொலராக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஒகஸ்ட் 22 முதல், தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 400 டொலர் அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலரின் பலவீனம், பணவீக்க அபாயங்கள், பெடரல் ரிசர்விலிருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வட்டி விகிதக் குறைப்புக்கள், ஆபத்தான சொத்துக்கள் மீதான நம்பிக்கை குறைதல், நடந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்க கொள்முதல் போன்ற பல காரணிகள் இதற்கு பங்களித்துள்ளது.
இந்த காரணிகள் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக, கிறிஸ்துமஸுக்குள் தங்கத்தின் விலை 4,000 டொலரை எட்டும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.