இலங்கை

தேசிய புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவராக ஜெனரல் நளிந்த நியமனம்

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட(Nalinda Nyangoda) இன்று (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இவருக்குரிய நியமனக் கடிதம், பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவால் நேற்று வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் நியங்கொட இன்று ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவத்தின் கவசப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நியங்கொட, இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றிய மிகவும் திறமையான சிரேஷ்ட அதிகாரி ஆவார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய நேற்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்