காசா அமைதி திட்டம் – டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்ற போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதி திட்டத்தின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி அழைப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும். இரு நாட்டு தலைவர்கள் இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இது குறித்து Xல் ஒரு பதிவில், “எனது நண்பர் டிரம்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்தேன். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அடைந்த நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் இஸ்ரேலும், ஹமாஸும் இன்று கையெழுத்திட்டதை தொடர்ந்து பிரதமர் மோடியின் அழைப்பு இடம்பெற்றுள்ளது.