பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி நான்கு பேர் மரணம்
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோக்பானியில் இருந்து வந்த அதிவேக வந்தே பாரத் ரயில் மோதி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்லிபுத்ரா நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயில் பூர்னியா சந்திப்பு அருகே ஐந்து பேர் மீது மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் பூர்னியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, கஸ்பா – பூர்னியா சந்திப்புக்கு இடையே அதிகாலையில் துர்கா பூஜை முடிந்து மீண்டும் வந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.
(Visited 3 times, 1 visits today)





