தைவான் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – நால்வர் மரணம்
தைவான்(Taiwan) தலைநகர் தைபேயில்(Taipei) உள்ள மெட்ரோ நிலையத்தில் நடந்த புகை குண்டுகள் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் சந்தேகநபர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாங் வென்(Chang Wen) என அதிகாரிகளால் பெயரிடப்பட்ட 27 வயது சந்தேக நபர் தாக்குதலுக்கு பிறகு காவல்துறையினரின் கைது நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் முகமூடி அணிந்து தைபே பிரதான நிலையத்தில் “ஐந்து அல்லது ஆறு புகை குண்டுகளை” வீசியதாக தைவானின் பிரதமர் சோ ஜங்-தாய்(Cho Chung-tae) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தைபே பிரதான நிலையத்தில் நடந்த தாக்குதல்கள் “வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.





