சீனாவில் அமெரிக்கர்கள் நால்வர் மீது கத்தி குத்து தாக்குதல்

அறிவு பரிமாற்ற திட்டத்தின் கீழ் சீனாவிற்கு விஜயம் செய்த நான்கு அமெரிக்க தேசிய கல்வி ஆலோசகர்கள் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நால்வரும் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது கூரிய ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து சீன அதிகாரிகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
காயமடைந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)