வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மருத்துவ அறிக்கை வெளியீடு
நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மார்பு தொற்று நோயால் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) சிகிச்சை பெற்று வரும் வங்கதேச(Bangladesh) முன்னாள் பிரதமர் கலிதா ஜியா(Khaleda Zia) சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் என்று அவரது மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர், பல உடல்நலக் கோளாறுகளுக்காக நவம்பர் 23 முதல் டாக்காவில்(Dhaka) உள்ள எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜியாவின் பராமரிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் மருத்துவக் குழுவில் பங்களாதேஷ், இங்கிலாந்து(UK), அமெரிக்கா(America) மற்றும் சீனாவைச்(China) சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். இந்த குழுவிற்கு இருதயநோய் நிபுணர் ஷாஹாபுதீன் தாலுக்தர்(Shahabuddin Talukdar) தலைமை தாங்குகிறார்.
ஜியாவின் மருமகள், தொழில் ரீதியாக மருத்துவரான ஜுபைதா ரஹ்மான்(Zubayda Rahman), லண்டனில்(London) இருந்து டாக்காவுக்குத் வந்து டிசம்பர் 5 முதல் மருத்துவக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.





