பிரித்தானியாவில் கடந்த 05 ஆண்டுகளாக அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலை!
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து உணவு பொருட்களுக்கான விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதன்படி ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக உயர்ந்துள்ளது.
மாட்டிறைச்சி, வெண்ணெய், பால் மற்றும் சாக்லேட் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை ஆண்டுக்கு 5.1% என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் விமானக் கட்டணம் போன்ற பிற துறைகளில் விலை வளர்ச்சி குறைந்ததால், UK பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தைப் போலவே 3.8% ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





