காஷ்மீரை தொடர்ந்து மணிப்பூரிலும் பாயும் ‘பெல்லட்’ குண்டுகள்…
காஷ்மீரை தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்திலும் பாயும் பெல்லட் குண்டுகளால் இளம்வயதினர் பலர் தங்களாது எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கை காக்கும் நோக்கில் பாதுகாப்பு படைகளால் காஷ்மீரில் பயன்படுத்தப்பட்ட வகையில் பெல்லட் குண்டுகள் சர்ச்சைக்கு ஆளாயின. உயிரைப் பறிக்காத அதே வேளையில் போராட்டத்தில் ஈடுபடுவோரை சாய்க்கும் வீரியம் கொண்ட பெல்லட் குண்டுகள் காஷ்மீரில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படபோது அதற்கு எதிராக போராடியவர்களை முடக்க பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இவை தற்போது மணிப்பூர் கலவர பூமியிலும் பாதுகாப்பு படைகளால் பிரயேகிக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூரின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்பவகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவே பெல்லட் குண்டுகளுக்கு அங்கே அனுமதி வழங்கப்பட்டன.
ஆனால் இந்த பெல்லட் குண்டுகள் தரும் வலியும் சேதமும் உயிரைப் பறிக்கும் குண்டுகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. உதாரணத்துக்கு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க, சிஆர்பிஎஃப் படையின் சிறப்பு அதிரடி குழுவினர் பெல்லட் குண்டுகளை பிரயேகித்தனர். அவை கூட்டத்தில் பாய்ந்ததில் பலரும் பார்வை கேள்விக்குறியானதுடன், தலைக்குள் பாய்ந்து தங்கிய பெல்லட்டுகளால் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளனர்.
உதாரணமாக சோய்பம் என்ற இளைஞர், வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு மிக்க வூசு விளையாட்டின் தேசிய வீரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவர் தலையில் 60க்கும் மேற்பட்ட பெல்லட் குண்டுகள் பாய்ந்தது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோய்பம் உட்பட ஏராளமான இளைஞர்கள், பெல்லட் குண்டுகளால் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து வருவது மணிப்பூரின் அண்மை துயரமாக வளர்ந்துள்ளது.