தென்கொரியாவில் தரவு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்து – பொது சேவைகள் பாதிப்பு!
தென் கொரியாவில் மத்திய மாநில தரவு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏராளமான பொது சேவைகள் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் அரசாங்க ஆன்லைன் அமைப்புகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடையில்லா மின்சாரம் வழங்கும் பேட்டரியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பேட்டரி LG எனர்ஜி சொல்யூஷனால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தீவிபத்தை தொடர்ந்து பல தீயணைப்பு வீரர்கள் களத்தில் பணியாற்றியுள்ளனர்.
60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளின் உதவியுடன் சுமார் 170 முதல் 200 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்துவது பேட்டரி சேதத்தை மோசமாக்கும் அல்லது சர்வர் யூனிட்களுக்கு இடையே தீ பரவக்கூடும் என்ற கவலைகளால் முயற்சிகள் சிக்கலாக மாறியதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர்வித்தல், ஈரப்பதம் கட்டுப்பாடு மற்றும் மின் அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக, தரவு ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க 600 க்கும் மேற்பட்ட சர்வர்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, டேஜியோன் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 647 அரசு அமைப்புகள் இடைநிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





