இலங்கையில் கோர விபத்து – இளம் தம்பதி பலி
ஹொரணை-மொரகஹேன வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மோதிக்கொண்டதில் இளம் தம்பதியினர் உயிரிழந்ததாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மதியம் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் லொறியும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
வளைவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை அருகில் இருந்த மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் பலத்த காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





