இலங்கையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – சாரதி பலி!
மொனராகல தனமல்வில-வெல்லவாய வீதியில் இன்று (03.10) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமாகியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலுதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





