இங்கிலாந்து வீரருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை
ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டுக்கான பிக்பாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் சிட்னி சிக்சர் அணியில் இடம் பிடித்த டாம் கரண் அடுத்த வரும் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லான்செஸ்டனில் டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்ஸர்ஸ் மோதியது இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட டாம் கரண் நடுவருடன் மோதலில் ஈடுபட்டார்.
English cricketer #TomCurran has been handed a 4-match ban for this 👇🏻👇🏻
A disgraceful act by an international cricketer. You can’t just intimidate an umpire physically.. that’s a total No-No!!! #BBL2023
— Mirza Nomaan Ashrafi (@Nkashrafi) December 21, 2023
போட்டிக்கு முன் பவுலிங் ரன் அப்பிற்காக டாம் கரண் அளவு மேற்கொண்டார். அப்போது ரன் அப் செய்ய முயன்றார்.
இதனை பார்த்த நடுவர் ஆடுகளத்தின் அந்தப் பகுதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட போதிலும், மற்றொரு பயிற்சி ரன்-அப்பிற்காக கரண் எதிர் முனைக்குச் சென்றார்.
ஆடுகளத்தை நோக்கி ரன் அப் செய்த தயாராக இருந்த டாம் கரணை தடுப்பதற்காக ஸ்டம்புகளுக்கு அருகில் நடுவர் நின்றார். இதை பார்த்த கரண் நடுவரை விலகிச் செல்லும்படி சைகை செய்தார்.
அதற்கு நடுவர் இதில் பயிற்சி செய்ய கூடாது. அதற்கு பக்கத்தில் செய்யுமாறு கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத கரன், அவரை நோக்கி ரன் அப் செய்து அவர் மீது மோதுவது போல ஓடி வந்து தள்ளி சென்றார்.
இதனால் ஆஸ்திரேலியா நடத்தை விதிகளின் கீழ் “நிலை 3” குற்றத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த நிலையில் நேற்று 4 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை அறிவிப்பு வெளியானது.