ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில்  மின் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பாக, மின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பேட்டரிகள் தொடர்பாக பல தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கேம்பிரிட்ஜ்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்வாறான சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 08 எட்டு பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்,மின் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்யும் போது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நம்பகமான உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும்,மின் மோட்டார் சைக்கிள்களை கேம்பிரிட்ஜ்ஷயர் பொலிஸார் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இவ்வாறான ,மின் மோட்டார் சைக்கிள்கள் குழந்தைகள் உட்பட பயனாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வேகத்தை அடையக்கூடும் என்றும் பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!