ஜார்க்கண்டில் திருடப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள யானை பீகாரில் மீட்பு

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் இருந்து திருடப்பட்டு 27 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் யானை பீகாரின் சப்ரா மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா, ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தின் சுகூர் பகுதியில் இருந்து ‘ஜெயமதி’ என்ற பெண் யானை திருடப்பட்டது குறித்து செப்டம்பர் 12 புகார் அளித்திருந்தார்.
நரேந்திர குமார் சுக்லாராஞ்சியில் இருந்து 40 லட்சத்திற்கு யானையை வாங்கியிருந்தார்.
“திருட்டு வழக்கு சதார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, விசாரணை நடந்து வருகிறது. காணாமல் போன யானை பீகாரின் சப்ராவில் உள்ள பஹத்பூரில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பீகார் காவல்துறையின் உதவியுடன் சப்ராவில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று மேதினிநகரின் அதிகாரி மணிபூஷன் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.