ஆசியான் கூட்டமைப்பில் 11வது உறுப்பினராக இணைந்த கிழக்கு திமோர்(East Timor)
ஆசியாவின் இளைய நாடான கிழக்கு திமோர்(East Timor) தென்கிழக்கு ஆசிய அமைப்பான ஆசியானின்(ASEAN) 11வது உறுப்பினராக இணைந்துள்ளது.
திமோர்-லெஸ்டே(Timor-Leste) என்றும் அழைக்கப்படும் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நாடு ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்.
மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் கிழக்கு திமோர் இணைவது 14 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆகும்.
கோலாலம்பூரில் நடந்த வருடாந்திர உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் ஆசியான் தலைவர்களால் கிழக்கு திமோர் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அங்கத்துவம் குறித்து பிரதமர் சனானா குஸ்மாவோ(Xanana Gusmão), தனது நாட்டிற்கு ஒரு வரலாற்று தருணம் என்றும், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான மகத்தான வாய்ப்புகளை கொண்டு வரும் ஒரு புதிய தொடக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆசியான் அமைப்பானது 1967ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி தாய்லாந்தின் பாங்காக்கில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் புருனே(Brunei), கம்போடியா(Cambodia), இந்தோனேசியா(Indonesia), லாவோஸ்(Laos), மலேசியா(Malaysia), மியான்மர்(Myanmar), பிலிப்பைன்ஸ்(Philippines), சிங்கப்பூர்(Singapore), தாய்லாந்து(Thailand) மற்றும் வியட்நாம்(Vietnam) உறுப்பினர்களாக உள்ளது.
இந்த நாடுகளின் பிராந்திய அமைதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பை நிறுவப்பட்டது.





