வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம் பதிவு – இடிந்து விழுந்த வீடுகளால் பரபரப்பு!
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கத்தினால் வீடுகளின் கூரை ஓடுகள் சிதறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 07 பேர் காயமடைந்துள்ளதாகவும், யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாங்சி மாவட்டத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
எட்டு வீடுகள் இடிந்து விழுந்தன, 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று மாநில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





