ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட போதைப்பொருள் குற்றவாளி
நாட்டின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான, ரூ.13,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரித்திக் பஜாஜ்(Rithik Bajaj), ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு(India) அழைத்து வரப்பட்டுள்ளார்.
டெல்லி(Delhi) காவல்துறையின் வழக்கின் கீழ் ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ரித்திக் பஜாஜ், இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 2024ல், டெல்லி மற்றும் குஜராத்தில்(Gujarat) ரூ.13,000 கோடி மதிப்புள்ள கோகோயின்(cocaine) மற்றும் 50 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை(hydroponic cannabis) பறிமுதல் செய்தது.
இந்த நடவடிக்கையின் போது 5 குற்றவாளிகளை கைது செய்து ரித்திக் பஜாஜ் உட்பட 14 பேர் மீது டெல்லி அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.




