இலங்கையின் தெற்கு பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரம்!
தெற்கில் அரசியல்வாதிகள் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பொதுமக்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த கால அரசியல் கலாச்சாரம் காரணமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் வளர்ந்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் அதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தங்காலையில் இன்று மூன்று பெரிய போதைப்பொருள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காவல்துறையினர் தங்கள் கடமைகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர். புலனாய்வு அமைப்புகள் அதிக அளவிலான தகவல்களைப் பெறுகின்றன. உங்களுக்குத் தெரிந்த எந்தத் தகவலையும் காவல்துறைக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அந்தத் தகவலும் தனிநபரின் பாதுகாப்பும் பாதுகாக்கப்படும்.” என உறுதியளித்துள்ளார்.





