ஐரோப்பா

ஜெர்மனியில் ட்ரோன்களால் அச்சுறுத்தல் – முடங்கிய விமான சேவைகள்

ஜெர்மனியின், மியூனிக் விமான நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டன.

ட்ரோன்கள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நேற்று 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

3,000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். உள்வரும் பதினைந்து விமானங்கள் ஸ்ரூட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டன.

சுமார் 20 பிற விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. விமான நிலையம், விமான நிறுவனங்களுடன் இணைந்து, முனையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு போர்வைகள், பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியது.

பொலிஸ் ஹெலிகொப்டர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பெடரல் பொலிஸ் உறுதிப்படுத்தியது. ஆனால் ட்ரோன்களையோ அல்லது அவற்றின் உரிமையாளர்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

பயணிகளின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில், டென்மார்க், ஒஸ்லோ விமான நிலையங்களில் ட்ரோன்கள் பறந்தால் விமான நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்