இலங்கை

ரன்வல விபத்தில் கடமை தவறிய பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகன விபத்து தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் விசாரணை ஒன்று நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விசாரணையில், சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), விபத்து குறித்து விசாரணை நடத்திய போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தைக் கண்காணிக்கும் சிரேஷ்ட வர்த்தமானி அறிவித்தல் பெற்ற அதிகாரிகள் (Senior Gazetted Officers) தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் மூலம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!