பிரித்தானியாவின் புதிய கட்டுமான விதிமுறை மாற்றங்களுக்குப் எதிர்ப்பு
இங்கிலாந்தில் புதிய கட்டுமான வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அணுகல் வசதிகளைக் கட்டாயமாக்கும் இலக்குகளில் அரசாங்கம் பாரிய குறைப்புகளைச் செய்துள்ளது.
அனைத்து புதிய வீடுகளும் மேம்பட்ட தரநிலைகளுடன் கட்டப்பட வேண்டும் என்ற முந்தைய அரசின் 100 சதவீத உறுதிப்பாட்டை மாற்றி, தற்போது அதனை 40 சதவீதமாகக் குறைப்பதாகப் புதிய திட்டமிடல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது மாற்றுத்திறனாளிகளைச் சமூகத்திலிருந்து ஒதுக்கும் செயல் என்றும், ஏற்கனவே இருந்த கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்குவது “நம்பமுடியாதது” என்றும் உரிமைப் போராட்டவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





