ஐரோப்பா செய்தி

இத்தாலியில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடங்கள் கண்டுப்பிடிப்பு!

வடக்கு இத்தாலியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்  ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இனங்காணப்பட்டுள்ள கால்தடங்களில்  சில 40 செ.மீ (15 அங்குலம்) விட்டம் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

மேலும் பலவற்றில் கால் விரல்கள் மற்றும் நகங்களின் தெளிவான தடயங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் மிலனின் வடகிழக்கில் உள்ள ஸ்டெல்வியோ (Stelvio national park) தேசிய பூங்காவின் சில கிலோமீற்றர் தொலைவில் புகைப்படக் கலைஞர் ஒருவர்  டைனோசர்களின் கால்தடங்களை படம்பிடித்தார்.

புரோசாரோபாட்கள் (prosauropods) என்று அடையாளம் காணப்பட்ட குறித்த டைனோசர் இனங்கள் சுமார் 250 முதல் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!