வாகன ஆவணங்களை இழந்த உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியதால் ஆவணங்களை இழந்த அல்லது சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரானதும், டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை மீட்டெடுக்க முடியாமல் தவிப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, ஆவணங்களை இழந்தவர்களிடமிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்து, மாற்று ஆவணங்களை வழங்குவதற்காக இந்த நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.





