ஊரடங்கு உத்தரவு நீக்கம் – இயல்பு நிலைக்குத் திரும்பிய நேபாளம்

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஐந்து நாட்களாக நீடித்த பாரிய போராட்டங்களுக்குப் பிறகு, நேபாள அரசாங்கம் நேற்று நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது.
அதற்கமைய, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அன்றாட வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக பதவியேற்றார், இதுபோன்ற பின்னணியில்தான் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்கவும் புதிய பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.
(Visited 1 times, 1 visits today)