சிங்கப்பூரில் அச்சுறுத்தலாகும் கொரோனா – மருத்துவமனைகளில் நிரம்பிய நோயாளிகள்

சிங்கப்பூரின் கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்தலாகிய நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 40க்கு மேல் கூடியது.
அண்மையில் பதிவான நோய்த்தொற்று நிலவரம் பெரிய அளவிலான கொரோனா பரவலாக மாறாது என்று நம்புவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஓங் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
காக்கி புக்கிட் வட்டாரத்தில் இடம்பெற்ற சமூக நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 21 times, 1 visits today)