ஹீத்ரோ விமான நிலையத்தில் கடவுச்சீட்டின்றி விமானத்தில் ஏறிய பயணியால் சர்ச்சை!
ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான டிக்கெட், கடவுச்சீட்டின்றி விமானத்தில் ஏறிய பயணியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. அன்று காலை 7.20 மணிக்கு நோர்வேயின் ஒஸ்லோவிற்கு (Oslo) பயணமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA) விமானத்தில் பெயர் குறிப்பிடப்படாத குறித்த பயணி ஏறியுள்ளார்.
குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்த பிற பயணிகளை பின்தொடர்ந்து சென்ற அவர், பாதுகாப்பு சோதனை நடைமுறைகளையும் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
வேறொரு பயணிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர் அமர்ந்திருந்தமையால், கேபின் குழுவினர் அந்த நபரைக் கண்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஊழியர்கள் அவரை கைது செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு குறைப்பாடுகளே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என மக்கள் விமர்சித்துள்ளனர்.





