ஐரோப்பா செய்தி

UKவில் தங்கியுள்ள ஹொங்கொங் மக்களின் நிரந்தர விசா தொடர்பில் எழுந்துள்ள கவலை!

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்களால்,  BNO விசாவில் இங்கிலாந்திற்கு வருகை தந்த ஹொங்கொங் மக்கள் தொடர்பில் 34 எம்.பிகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

புதிய மாற்றங்கள் புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்தில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும், படிக்கவும், பின்னர் பிரித்தானிய குடியுரிமையைப் பெறவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் அரசாங்கம் பிரத்தானிய  தேசிய வெளிநாட்டு (BNO) விசாக்களை சுமார் 200000 ஹொங்கொங் மக்களுக்கு வழங்கியது.

1997 ஆம் ஆண்டு சீனாவின் பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து  தப்பித்து வந்த சில ஹொங்கொங் மக்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் BNO விசாக்களை வழங்கியது. 

தற்போதைய புதிய சட்டங்கள் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என 34 அமைச்சர்கள் கவலைக்கொண்டுள்ளனர்.

ஆகவே அவர்களின் பாதுகாப்பு மற்றும் விசா தொடர்பான தேவைகள் பூர்த்தி செய்வதை உறுதி செய்யுமாறு  34 எம்.பிகளும்  இடம்பெயர்வு அமைச்சர் மைக் டாப்பிற்கு (Mike Tapp) கடிதம் எழுதியுள்ளனர்.

BNO விசாவில் பிரித்தானியாவிற்கு வந்த முதல் ஹொங்கொங் மக்கள் மார்ச் 2026 முதல் பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள்.

ஆனால் புதிய திட்டங்களின் கீழ் அவர்களின் இந்த சலுகை பூர்த்தி செய்யப்படாமல் போகலாம் என்றும் குறித்த அமைச்சர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் குறைந்தபட்ச சம்பளத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுவார்கள், இதனால் அவர்களுக்கு IRL மறுக்கப்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தன்னார்வத் தொண்டு, அக்கறை கொண்ட பொறுப்புகள் அல்லது ஒரு முக்கிய பணியாளராக இருப்பது போன்ற பிற பங்களிப்புகளை உள்துறை அலுவலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதாக தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்றும் மேற்படி 34 அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!