இலங்கை

கொழும்பு – கண்டி பிரதான வீதி நாளை முதல் திறப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதி, நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்தில் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தது.

அதிக உயிரிழப்புகளும் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகி இருந்தது. கடுகன்னாவ பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருந்தன.

தற்பேோது மழை மற்றும் வெள்ள நிலை சீராகி வரும் நிலையில், மீட்பு பணிகள், சீராக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி, நாளை முதல் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!